விவசாயிகளுக்கான தானிய ஈட்டு கடன் 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையில், மத்திய கூட்டுறவு வங்கியில் தானிய ஈட்டு கடன் கொடுக்கப்படுகிறது. இதன் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று தானிய ஈட்டு கடன் உச்சவரம்பும் 10 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கி அறிவுரைகளை பின்பற்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வேளாண் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் தானிய ஈட்டு கடன் வழங்குதல் தொடர்பாக ஏற்கனவே நடைமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறைகளை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.