
தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை 10 மணி வரையில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதன்படி இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு விருதுநகர் மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கனிந்துள்ளது.