தென்மேற்கு வங்க கடலில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று நாளை இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் வருகிற 14-ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.