தமிழகத்தில் வீடு வீடாக வாக்காளர் விவரங்களை சரி பார்க்கும் பணி இன்று  ஜூலை 21ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு வருடத்தில் ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கும் நிலை இருந்தது. தற்போது இந்த நிலை மாற்றப்பட்டு வருடத்திற்கு நான்கு முறை இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை 1ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு பெறப்பட்ட விண்ணப்பங்களின் படி தற்போது வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடி 10 லட்சத்து 39 ஆயிரத்து 316 என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு வீடாக சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும் பணி ஜூலை 21ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.