
தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று கட்டங்களாக விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது முதல் கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது குடும்ப தலைவிகளின் விரல் ரேகை பதிவுடன் அனைத்து விவரங்களும் கணினி மூலமாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நாள் ரேஷன் கடைகளில் பயன்பாட்டில் இருந்து வந்த பயோமெட்ரிக் கருவிகள் அனைத்தும் முகாம்களில் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் கையெழுத்திட்ட தேவையான ரேசன் பொருட்களை வாங்கி வந்தனர். இந்நிலையில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகைக்கான முதல் கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் பயோமெட்ரிக் கருவிகள் ரேஷன் கடைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் எந்த நியாய விலை கடைகளின் மூலமாகவும் ரேஷன் பொருட்களை இனிவரும் நாட்களில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது