
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முடிவடைந்த நிலையில் கடந்த 8-ம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் வெளியான நிலையில் இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் வெளியாக இருக்கிறது.
இதேபோன்று 11-ம் வகுப்புக்கும் இன்று ரிசல்ட் வெளியாகிறது. இந்நிலையில் தமிழக தொழில்நுட்ப இயக்கத்தின் சார்பில் தற்போது பாலிடெக்னிக் படிப்பு சம்பந்தமாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இனி பன்னிரண்டாம் வகுப்பில் எந்த குரூப் எடுத்தாலும் நேரடியாக பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரலாம்.
இதுவரை வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய 3 பாடங்கள் படித்தவர்கள் மட்டும்தான் பாலிடெக்னிக் குரூப் எடுக்க முடியும். ஆனால் இனி வணிகம், காமர்ஸ் படித்தவர்கள் கூட பாலிடெக்னிக் குரூப் எடுக்கலாம்.
மேலும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டில் சேர்ந்து படிக்க வேண்டும். அதே நேரத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இனி எந்த குரூப் எடுத்து படித்திருந்தாலும் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.