
தமிழகத்தில் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் வேலூர் மாவட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதனைப் போலவே சென்னையில் காலை முதல் லேசான மழை பெய்து வரும் நிலையில் விடுமுறை அளிக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.