தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற நான்கு மாவட்டங்களை மிக்ஜாம்  புயல் தாக்கி பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதிலிருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கியது.

விடாமல் பெய்த மழையின் காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ள நீர் வீட்டுக்குள் புகுந்தது. அதனால் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் .மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று (டிச. 22) 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை என்றும், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நெல்லையில் இன்று பள்ளிகளில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதோடு, தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.