தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆவின் பாலகத்தில் பால் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் பெரும்பான்மையான விற்பனையாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு பாலை விற்பனை செய்து வருவதால் நாளுக்கு நாள் கொள்முதலும் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் தமிழ்நாடு பால் உற்பத்தி மேலாண்மை கொள்கை உருவாக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டார்.

பால் கொள்முதலை அதிகரிப்பது மற்றும் பாலின் தளத்தை சோதனை செய்யும் தொழில்நுட்பத்தை ஒழுங்கு படுத்துவது மற்றும் லாபகரமான ஆவின்பால் நிறுவனத்தை நடத்தி செல்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை அஞ்சல் மூலமாக ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் ஆணையர் அலுவலகம், பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு துறை மாதவரம் பால்பண்ணை சென்னை 600051 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தியை பெருக்கும் விதமாக ஆகஸ்ட் 25ம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.