
தமிழகத்தில் ஆன்லைன் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று தமமுக தலைவர் ஜான்பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைனில் கடன் வாங்கிய இளைஞர் ராஜேஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஏராளமான நபர்கள் கடன் செயலில் இருந்து கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தியும் பணம் கேட்டு மிரட்டும் செயல் தமிழகத்தில் வழக்கமாக நடைபெற்று வருகிறது. எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் நலனை கருத்தில் கொண்ட இந்த கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.