
தமிழகத்தில் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி மாணவர் எண்ணிக்கையின்படி அரசு பள்ளிகளில் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது.
பிறகு பணி நிரவல் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த பணி நிறைவள் கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலமாக திங்கட்கிழமை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சில நிர்வாக காரணங்களால் பணி நிரவல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நவம்பர் 27ஆம் தேதி பணி நிரவல் கலந்தாய்வு நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.