
தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்களுக்கும் கற்றல் கற்பித்தல் திறனை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளது.
இதற்காக 30 நாட்கள் சான்றிதழ் உடன் கூடிய ஆங்கில பயிற்சி படிப்பை பெங்களூருவை சேர்ந்த RESI என்ற நிறுவனம் வழங்க இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் ஆர்வமுள்ள 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். மேலும் இந்த பயிற்சி வருகிற 16-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.