தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சிகள் தொடரும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர், நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இருந்தாலும் அரசு பள்ளியில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் விதமாக சிறப்பு பயிற்சி நடைபெறும். அரசு பள்ளி மாணவர்களால் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து தனியாரிடம் பயிற்சி பெற முடியாது என்பதால் மாணவர்களின் நிதிச் சுமையை குறைக்க அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.