தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பிஎட் மாணவர்கள் பயிற்சி பெற வழிகாட்டுதல்களை பள்ளி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு ஆண்டில் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒதுக்கப்பட்ட பயிற்சி மாணவர்களின் விவரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும்.

பி எட் மாணவர்களின் பயிற்சிக்கான சான்றிதழ்களை அந்தந்த பள்ளிகளே வழங்க வேண்டும். பயிற்சி மாணவர்கள் செப்டம்பர் 11 அதாவது இன்று முதல் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு வர தொடங்குவார்கள். அவர்களை பள்ளிகளில் பயனுள்ள வகையில் உரிய பயிற்சியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.