இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ மூலம் மொபைல் போன் பயனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதாவது நவீன வகையான மோசடி ஒன்று நடந்து வருவதாகவும், பணம் சம்பாதிக்க இந்த டெலிகிராம் குரூப்பில் இணையுங்கள் என லிங்க் பரவுகிறது. அதில் இணைந்தால் முதலீடு இரட்டிப்பு லாபம் பெற்ற ஆசை வார்த்தைகளை கூறி மோசடி கும்பல் உங்களிடம் இருந்து பணம் பெற்று ஏமாற்றுவார்கள். எனவே மிக கவனமாக இருங்கள் என்று அவர் எச்சரித்துள்ளார்.