இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் புதிய மோசடியில் மக்கள் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். அதில் அமேசான் பரிசு போட்டியில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டதாக அமேசான் லோகோ, போன் நம்பர் உடன் கடிதம் வரும். அதற்கு தொடர்பு கொண்டால் பரிசை பெற ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த கூறுவர். அதை செலுத்தினால் அந்த எண் சுவிட்ச் ஆப் ஆகிவிடும். அதன் பிறகு தான் நீங்கள் ஏமாந்தது உங்களுக்கு தெரிய வரும் என்று அவர் எச்சரித்துள்ளார்.