தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன்படி அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைப்பதற்காக வாரத்தில் ஒருமுறை தலா 20 கிராம் வேகவைக்கப்பட்ட கருப்பு கொண்டை கடலை அல்லது பாசிப்பயிறு வழங்கப்பட வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

உணவு துறையின் கீழ் இயங்கும் நுகர் பொருள் வாணிப கழகம் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதனை கொள்முதல் செய்து பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது 250 டன் கருப்பு கொண்ட கடலையும் 190 டன் பச்சை பயிறும் கொள்முதல் செய்யும் பணியில் வாணிப கழகம் ஈடுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வாரத்தில் ஒரு முறை கொண்டக்கடலை மாணவர்களுக்கு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.