தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் காலை மற்றும் மாலை வேலைகளில் மாணவர்களுக்கு குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சிகளை அளிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளில் பாடங்களை பயில்வதற்கு அளிக்கப்படும் மன அழுத்தத்தால் பிற கல்வி சார்ந்த நடவடிக்கைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தாலும் மாணவர்கள் உடற்பயிற்சி நடவடிக்கைகளை புறக்கணிக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் உடல் பருமன் மற்றும் அதிக எடை பாதிப்புக்கு மாணவர்கள் ஆளாவதற்கு காரணமாகிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின் படி 6.8% குழந்தைகளும், வளர் இளம் பருவத்தினரும் உடல் பருமனுடன் உள்ளனர். உடற்பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் போது ஆரோக்கியமான உடல் நலத்தையும் மனநலத்தையும் பெற முடியும். இதனை கருதி அனைத்து பள்ளிகளும் காலை மற்றும் மாலை வேலைகளில் அரை மணி நேரம் மாணவர்களுக்கு உடற்பயிற்சி அளிக்க வேண்டும். உடற்பயிற்சியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை அமல்படுத்த அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.