இந்தியாவில் கொரோனா மூன்று அலைகளை தாண்டி தற்போது மீண்டும் அதி வேகத்தில் பரவ தொடங்கி இருக்கிறது. அதாவது தற்போது ஓமிக்ரானின்  துணை வேரியண்ட் வகை கொரோனா அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது மற்ற கொரோனா வைரஸ்களை போல சாதாரணமாக இருக்கும் என்று மக்கள் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியம் வலியுறுத்தியிருக்கிறார். உலகளவில் அதிகம் பரவும் JN1 வகை கொரோனா தமிழ்நாட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது