கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் வேப்பூர் மேம்பாலத்தின் மீது மூன்று தனியார் சொகுசு ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அதாவது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதியது. கிட்டத்தட்ட மூன்று பேருந்துகள் மோதியதால் கோர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 35 பேருக்கும் மேல் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்து காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.