தமாகா திருச்சி மாநகராட்சி முதல் பெண் மேயரான புனிதவள்ளி பழனியாண்டியின் மகன் இளங்கோ உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி
செலுத்தியுள்ளார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன். இவரது மறைவிற்கு கட்சி பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த இளங்கோவின் தந்தை தமாகா உயர்மட்ட குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான பழனியாண்டி என்பது குறிப்பிடத்தக்கது