பொதுவாகவே உலகில் வாழக்கூடிய அனைத்து உயிரினங்களுக்கும் தூக்கம் என்பது இன்றியமையாதது. மனிதர்களை பொருத்தவரை ஆரோக்கியமாக இருப்பதற்கு உணவு மற்றும் உடற்பயிற்சி எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு சிறந்த தூக்கமும் முக்கியம். சரியாக தூக்கம் இல்லாத போது மனிதர்களால் அடுத்த நாள் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. தொடர்ந்து சரியாக தூங்கவில்லை என்றால் உடல் ரீதியான பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. தூக்கமின்மை பிரச்சனையால் பல உடல் ரீதியான பிரச்சனைகளும் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் ஒரு உயிரினம் தன் வாழ்நாள் முழுவதும் உறங்காது என்றால் உங்களால் நம்ப முடியுமா. எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய எறும்புகள் தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறை கூட உறங்காதது என ஆய்வு தகவல்கள் கூறுகின்றன. எறும்புகள் வாழ்நாள் முழுவதும் தூங்காது. சுறுசுறுப்புக்கு உதாரணமாக எப்போதும் எறும்புகள் குறிப்பிடப்படுகின்றன ஆனால் ஒருமுறை கூட உறங்காமல் எறும்புகளால் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்று கேள்வி எழுகின்றது. அதற்கு காரணம் எறும்புகள் ஒரு நாளைக்கு சுமார் 250 முறை ஓய்வெடுப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அதனால்தான் வாழ்நாள் முழுவதும் அவற்றால் ஆற்றலுடன் இயங்க முடிகின்றது. லட்சக்கணக்கில் குழுக்களாக வாழ்வதால் எறும்புகள் காலனிகள் என்று அழைக்கப்படுகின்றன. எறும்புகளின் இனம் பூமிக்கு 2 லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து எறும்புகள் இனம் வாழ்ந்து வருகிறது. இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள பெரோமோன் என்ற ரசாயனம் உதவுகிறது. உணவு தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும் ஆபத்துக்கள் வரும்போது மற்ற எறும்புகளை எச்சரிக்கவும் இதுதான் உதவுகிறது.