தன்னைவிட 7 வயது குறைவான பிக் பாஸ் பிரபலமான கவினுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்த சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கானா காணும் காலங்கள் சீரியல் மூலமாக அறிமுகமாகி அதன் பிறகு படிப்படியாக அடுத்தடுத்து சீரியல்களில் நடித்து  சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கதாபாத்திரம் இவரை மீண்டும் பிரபலமாக்கியது. இந்த  சீரியலில் பிரபலமாகிய பிறகு வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்று சின்ன சின்ன வேடங்களில் நடித்த அதன்பிறகு பிக் பாஸ் வீட்டில் நுழைந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லிப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தின் மூலமாக தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து டாடா என்ற படத்தில் நடித்து இன்னும் அதிகளவில் பிரபலமானார். இதனை தொடர்ந்து கவின் புதிய படம் ஒன்றில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.