எம்ஜிஆர் முதல் விஜய் வரை பல முன்னணி நடிகர்களும் இதுவரை அரசியலுக்கு வந்துள்ள நிலையில் நடிகர் அஜித் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருந்தாலும் அரசியலில் நுழையாமல் இருந்து வருகின்றார். இவ்வாறு இருக்க நடிகர் அஜித்தை தன்னுடைய அரசியல் வாரிசாக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சி செய்தார் என்று தகவல் கசிந்துள்ளது. பிரபல பத்திரிகையாளர் வி கே சுந்தர், அஜித்தை அரசியலில் வரவழைக்க வேண்டும் என ஜெயலலிதா முயற்சி செய்தார். ஆனால் அது கடைசி வரை நடக்காமலேயே போய்விட்டது எனக் கூறியுள்ளார்.