
சென்ற 2002-ம் வருடம் விக்ரம் நடிப்பில் வெளியாகிய “சாமுராய்” படத்தில் நடித்ததன் வாயிலாக நடிகையாக அறிமுகமானவர் தான் ஸ்ரேயா ரெட்டி. இதையடுத்து விஷால் நடிப்பில் வெளியாகிய “திமிரு” படத்தில் இவர் நடித்திருந்த வில்லி கதாபாத்திரம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. அதன்பின் வெயில், காஞ்சிவரம் ஆகிய படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். கடந்த 2008-ல் விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா ரெட்டி.
அதோடு விஷாலின் தோரணை, வெடி உள்ளிட்ட திரைப்படங்களையும் ஸ்ரேயா ரெட்டி தயாரித்துள்ளார். இவர் இப்போது இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வரும் “சலார்” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் ஸ்ரேயா ரெட்டி காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நிலையில் சலார் படத்தில் தன்னுடன் பணிபுரிந்த உதவியாளர்களுக்கு தங்க நாணயங்களை ஸ்ரேயா ரெட்டி பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.