தனுசு ராசி அன்பர்களே,

இன்று அனைவரிடமும் அன்பாக பழகி காரியங்களை சாதிக்க முடியும். தன வரவு சீராக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். தொழில்  ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். நண்பர்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க வேண்டி இருக்கும்.

உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைவாய்ப்புகளை இன்று ஏற்படுத்திக் கொள்வீர்கள். முயற்சிகள் நல்ல பலனை கொடுக்கும். தக்க பலன் கண்டிப்பாக கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கண்டிப்பாக கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். அனைவரும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

இன்று பல உண்மைகளை புரிந்து கொள்வீர்கள். தவறான சகவாசங்களை விட்டு விடுவது நல்லது. திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறலாம். பெண்களுக்கு வரவேண்டிய பணம் வரக்கூடும். நிதி தொடர்பான விவகாரங்களில் மாற்றம் இருக்கும். பணி புரியும் இடத்தில் நற்பெயர் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும். இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். கையில் ஓரளவுக்கு காசு பணம் இருக்கக்கூடும். எந்த ஒரு செயலிலும் சிந்தித்து ஈடுபடுவது நல்லது. இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு செயலிலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  வடக்கு

அதிஷ்ட எண்  :  7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்  : பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்