
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு விவகாரத்து வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த கணவனுக்கு சார்பாக விவாகரத்து வழங்கிய நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதன் மூலம் விவாகரத்துக்கு கணவன் கூறிய காரணத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
அது என்ன காரணம் என்றால் மனைவி தொடர்ந்து அந்த கணவனை தனி அறையில் தூங்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இது போன்ற செயல்கள் கணவன் மனைவிக்கு இடையே இருந்தால் மனநலமும் உடல்நலமும் பாதிக்கப்படும் என்பதை மையமாக வைத்து கணவனுக்கு ஆதரவாக நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
ஆக இனி கணவன் மனைவி இருவரில் யாரேனும் தனி அறையில் தான் படுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் விவாகரத்து கேட்கலாம் என்று தெரியவந்துள்ளது.