கடலூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மீதிகுடி பகுதியைச் சேர்ந்த கமலத்தின் மகள் நிவேதாவும் பள்ளிப்படையை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸும் காதலித்தனர். கடந்த 2021-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நிவேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தன்னை தனி அறையில் அடைத்து வைத்து கணவர் சித்திரவதை செய்து வருவதாகவும், இரண்டு முறை கர்ப்பத்தை கலைத்து விட்டதாகவும் நிவேதா ஏற்கனவே அவரது தாய் கமலத்திடம் கூறியதாக தெரிகிறது. இதனால் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கமலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.