
சென்னை பூந்தமல்லி சென்னீர்குப்பம் பகுதியில் மோகன் (32)-பரிமளா (28) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நட்சத்திரா என்ற 5 வயது மகள் இருக்கிறார். இன்று காலை மோகன் மற்றும் குழந்தை இருவரும் வீட்டிலிருந்து நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் பூந்தமல்லி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நிலையில் அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது மோகன் மற்றும் குழந்தை இருவரும் பிணமாக கிடந்தனர். பின்னர் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது பரிமளா கடந்த சில மாதங்களுக்கு உறவினர் ஒருவருடன் சென்று விட்டார். அதன்பின் நேற்று மோகன் தன் மனைவி இருக்கும் இடத்திற்கு சென்று அவருடன் தகராறு செய்துவிட்டு குழந்தையை மட்டும் அழைத்து வந்துள்ளார். அதன் பிறகு மிகுந்த மன வேதனையில் இருந்த மோகன் மனவேதனையில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் தானும் அந்த விஷயத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.