கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் தொடர்பாக, இன்று (அக்.15) தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

தனது உரையில், “தவெகவினர் சரியான முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை” எனக் குற்றம்சாட்டியதும், விஜய் மீது நேரடியாக குற்றம் சுமத்தியதாக சிலர் விமர்சனம் எழுப்பினர். இந்நிலையில், சமூக வலைதளமான X தளத்தில் முதல்வர் ஸ்டாலின் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், “கரூர் துயர் சம்பவம் குறித்து எந்த ஒரு தனிநபர் மீது பழி சுமத்தி, அவரை பலிகடா ஆக்குவது என்பது அரசின் நோக்கம் அல்ல. ஆனால், திட்டமிட்டு அரசு மீது பொய்யான தகவல்களை பரப்பும் சில செயல்கள் நடப்பதால், உண்மையை விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். துயர் நிகழ்வுகளை அரசியல் பாணியில் மாற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும், உண்மையைக் கொண்டு மக்கள் முன் அரசின் பதிலை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பும் நிதானமும் அரசிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

“>