ஆந்திர மாநிலம் மத்தூர் பகுதியில் ஒரு காகித தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு ஒரு தந்தையும் மகனும் வேலை பார்த்து வரும் நிலையில் தசரா பண்டிகையை முன்னிட்டு அந்த தொழிற்சாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இவர்கள் நேற்று முன்தினம் இரவு தொழிற்சாலையில் உள்ள ஒரு அறையில் தங்கள் மனைவிகளுடன் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பைக்கில் 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த தந்தை மகனை கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

இதில் இருவரும் பலத்த  காயம் அடைந்த நிலையில் பின்னர் மாமியார் மற்றும் மருமகள் இருவரையும் அவர்கள் 4 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தசரா பண்டிகையின் போது பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபிக்கு உத்தரவிட்டு உள்ளார்.