
சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் பகுதியில் வசித்து வரும் நேபாளத்தைச் சேர்ந்த கணேஷ் (40), அந்த பகுதியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி, தனது நண்பரான கேசப் புல் என்பவரை சந்தித்து, இரவு உணவு வழங்கி, தன்னுடன் தங்குமாறு கேட்டிருந்தார்.
அடுத்த நாள் அதிகாலை, கேசப் புல் வீட்டை சுற்றி பார்த்தபோது, எடுத்துச் செல்லக்கூடிய மதிப்புள்ள பொருட்கள் இல்லாததால், கணேஷின் மனைவியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அவரது கண்களில் பட்டது.
நண்பனும் மனைவியும் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த அவர், மெதுவாக அருகில் சென்று நகையை பறிக்க முயன்றார். அப்போது கணேஷ் திடீரென விழித்ததால், கேசப் புல் சிக்கி கொண்டார்.
தனது நெருங்கிய நநண்பர் இப்படி செய்ததால் அதிர்ச்சியடைந்த கணேஷ், உடனடியாக மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு எய்த போலீசார் கேசப் புல்லை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.