
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்துள்ள காரணத்தால் இன்று சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஏற்கனவே கர்நாடகா மற்றும் ஆந்திராவில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதனால் விலை 100 ரூபாயை தொடலாம் என கூறப்படுகிறது. வரத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப மேலும் பல வாரங்கள் வரை ஆகும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர். இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.