தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தொடர் மழை காரணமாக மகசூல் குறைந்து தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

அதன்படி ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே தக்காளியை மாநில அரசு கொள்முதல் செய்து விவசாய சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.