விருதுநகர் மாவட்டத்தில் கூமாபட்டி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள அழகு மற்றும் அருமை பெருமைகளை‌ அந்த கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் dark- night- tn 84 என்ற இன்ஸ்டா ஐடியின் மூலமாக தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.

இணையத்தில் வைரலாகும் பல டிரண்டுகளுக்கு மத்தியில் இந்த கிராமத்தின் அழகினை எடுத்துரைக்கும் ரீல்ஸும் ஒன்றாகும். அந்த வீடியோக்களில் மன அழுத்தமா விடுமுறையை கொண்டாட வேண்டுமா கூமாபட்டிக்கு வாங்க கூமாபட்டி ஒரு தனி தீவு இந்த ஊரின் தண்ணீர் மூழ்கி தண்ணீர் என்று பேசிய பல வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

“>

 

இந்த வீடியோக்களை பார்த்த பலரும் கூமா பட்டியா? இது எங்க இருக்கு? எந்த ஊரு? என்று கூகுள் மேப்பில் தேடிப் பார்த்து அந்த ஊருக்கு படையெடுத்து செல்கின்றனர். இந்த கிராமத்தைப் பற்றிய வீடியோக்களை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளதாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.