
ராஜமவுலி டைரக்டில் வெளியாகிய ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம்.எம் கீரவாணி. இவருடைய இசையில் உருவாகிய நாட்டு நாட்டு பாடலுக்கு அண்மையில் ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த நிலையில் கீரவாணி பேட்டி ஒன்றில் கூறியதாவது, இயக்குனர் ராம்கோபால் வர்மா தான் என் முதல் ஆஸ்கர் விருது என்று கூறி இருந்தார்.
மேலும் ஒரு காலத்தில் நான் இசையமைத்த படங்களின் ஆடியோ கேசட்டுகளை சிலர் குப்பைத் தொட்டியில் வீசினர். எனினும் தன்னை நம்பி மீண்டுமாக எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் ராம்கோபால் வர்மா தான். அதன்பின் நான் இசையமைத்த அவரது படங்கள் ஹிட்டடித்தது. ராம்கோபால் வர்மாவே இந்த இசையமைப்பாளருடன் தொடர்ந்து பணியாற்றுகிறர் எனில் அவரிடம் ஏதோ விஷயம் இருக்கிறது என நினைத்து மற்ற இயக்குனர்களும் எனக்கு வாய்ப்பளித்தார்கள். இதன் காரணமாக ராம்கோபால் வர்மாதான் என்னுடைய முதல் ஆஸ்கர் விருது என தெரிவித்திருக்கிறார்.