இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதீத வளர்ச்சியை அடைந்துவிட்டது. தற்பொழுது உலகம் முழுவதுமே AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகமாகி வருகின்றது. அதாவது மனித தேவைகளை குறைக்கும் விதமாக இந்த தொழில்நுட்பத்தின் மூலமாகவே செய்திகள் வாசிப்பது என ஏகப்பட்ட தொழில்நுட்பம் வர ஆரம்பித்துவிட்டது. ஏன் ஒருவருக்கு எப்போது மரணம் வரும் என்பதை AI மூலம் கண்டறிய முடியும்.

இந்நிலையில் பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பாக்டீரியாவை அடையாளம் காணும்  முக்கிய ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். நுண்ணோக்கி மூலமாக கொடுக்கப்பட்ட படங்களை ஆராய்வதன் மூலமாக டைபாய்டு போன்ற  தொற்றுநோயைக் கண்டறியும் AI ஐ உருவாக்கியுள்ளனர்.