
சாலையில் நின்று கொண்டிருந்த மாட்டின் மீது வாலிபர் கல் எறிந்ததால் மாடு அவரை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இன்ஸ்டாகிராமில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் சாலையில் அமைதியாக நின்று கொண்டிருந்த மாட்டின் மீது வாலிபர் ஒருவர் கல்லை எடுத்து எறிகின்றார். முதலில் மாடு அமைதியாக நகன்று சென்றது. பின்னர் வாலிபர் இடைவிடாமல் மாட்டின் மீது கற்களைத் தொடர்ந்து எறிந்து கொண்டே இருந்ததால் சாலையில் நின்று கொண்டிருந்த மற்ற மாடுகளும் சேர்ந்து அவரை துரத்தி சென்று மிதித்து தாக்கியது.
இதில் வனவிலங்குகளின் மீது நாம் வேண்டும் என்றே தூண்டுதல் மற்றும் இத்தகைய கவனக்குறைவான செயல்களில் ஈடுபட்டால் ஆபத்து நமக்கு தான் என்பதை உணர்த்துகின்றது. மேலும் மாடுகள் எந்த வகையான அச்சுறுத்தலை உணர்ந்து இருந்தால் இவ்வாறு ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே வன விலங்குகளை தேவையில்லாமல் சீண்ட கூடாது என்பதை நாம் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
View this post on Instagram
“>