நாடு முழுவதும் ஸ்டண்ட் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினந்தோறும் வைரலாகும் நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தின் சத்தாரா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான டேபிள் பாயிண்டில் நேற்று நடந்த பரிதாபமான விபத்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் குஜ்ராவதி பகுதியில் உள்ள டேபிள் பாயிண்டில் ஒரு இளைஞர் தனது காரில் ஸ்டண்ட் செய்ய முயன்ற போது, கார் சமநிலை இழந்து சுமார் 300 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கார் ஓட்டுனர் காயமடைந்து, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த ஸ்டண்ட் சம்பவத்தின் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல், இவ்வாறு விபத்துகள் தொடர் வடிவில் நடப்பதாகவும், நிர்வாகம் எச்சரிக்கைகள் இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். “டேபிள் பாயிண்ட் போன்ற இடங்களில் தடுப்பு வேலி போன்ற அடிப்படை பாதுகாப்பு வசதிகள் கூட இல்லை” எனவும், “இது நிர்வாகத்தின் பராமரிப்பு குறைபாட்டால் தான்” என்றும் வலியுறுத்தினர்.

சம்பவம் நடந்ததும், காவல்துறையினர் மற்றும் மீட்பு பணியாளர்கள் விரைந்து வந்து, அந்த இளைஞரை ஆழமான பள்ளத்தில் இருந்து மீட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு, அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.