தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களுக்காக அறிவித்துள்ள மிக முக்கியமான “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டத்தை செயல்படுத்துவதற்கான அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி, இந்த மெகா திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்படும் என்று முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக ஒரு கிராம் எடையுள்ள சுமார் 4,41,667 தங்க மோதிரங்களை வாங்குவதற்கான ஒப்பந்த (டெண்டர்) அறிவிப்பை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.

​இதற்கான டெண்டர் விண்ணப்பங்கள் இன்று (ஜூலை 14) முதல் தொடங்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஏழை எளிய குடும்பங்களுக்குப் பெரும் பொருளாதார உதவியாக இருக்கும் என்பதால், மக்கள் மத்தியில் தற்போதே பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. டெண்டர் நடைமுறைகள் மிக விரைவாக முடிக்கப்பட்டு, செப்டம்பர் 15 அன்று பயனாளிகளுக்குத் தங்க மோதிரங்கள் வழங்கும் பணி மிக பிரம்மாண்டமாகத் தொடங்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.