டெல்லியை சேர்ந்த இரண்டு பேர் டேட்டிங் ஆப் செயலி மூலமாக பெண்களை தொடர்பு கொண்டு அதன் பிறகு பெண்களிடம் அவர்கள் நடந்து கொண்ட விதம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இது குறித்து கடந்த 31ம் தேதி அன்று 28 வயது நிரம்பிய ஈமப்பேன் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் இரண்டு நாட்களுக்கு முன்பாக விஜய் என்ற நபர் ஒருவர் டேட்டிங் ஆப் வழியாக அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பலமுறை மெசேஜ் அனுப்பியுள்ளார். அதன் பிறகு இருவரும் பேச தொடங்கி வீட்டில் தனியாக இருக்கும் பொழுது நேரில் வந்து சந்திக்கும்படி அந்த நபரிடம் பெண் கூறியுள்ளார்.

அதன்படி கடந்த 30ஆம் தேதி அன்று வீட்டுக்கு வரும்படி அழைத்திருக்கிறார் அந்தப்பெண். ஆனால் அன்று தன்னுடைய நண்பரோடு விஜய் சென்றுள்ளார். அதன்பிறகு அவர்கள் இருவரும்  ஒரு அறைக்குள் பெண்ணை கொண்டு சென்று கை, கால்களை கட்டி போட்டு வாயை துணியால் சுற்றி மூடி இருக்கிறார்கள். அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தி அவரிடம் இருந்து தங்க நகை, செல்போன், ஐந்தாயிரம் பணம் இவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதேபோல விஜய்  46 வயது பெண் ஒருவருடமும் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவர் மீது மொத்தம் நான்கு வழக்குகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.