உத்தரப்பிரதேச மாநிலத்தில் லாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் அஞ்சலி என்ற பெண்ணை காதலித்துள்ளார். 16 முதல் 18 வயதிற்கு உட்பட்ட வாலிபர்களை குறி வைத்து அஞ்சலி பேசி பழகியுள்ளார். லாலு தனது காதலியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டார். டேட்டிங் ஆப்ஸ் மூலம் அஞ்சலி வாடிக்கையாளர்களை அடையாளம் காணுவார். இந்த நிலையில் நொய்டாவில் வசிக்கும் வாலிபர் மூலம் ஒரு பெண்ணை அழைத்து அவருடன் ஜாலியாக ஊர் சுற்றி வந்தார். அந்த வாலிபருடன் இருந்த அஞ்சலி அளித்த தகவலின் படி லாலு உள்ளிட்ட சிலர் அந்த காரை சுற்றி வளைத்தனர்.

அவர்கள் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கவைத்து சிறைக்கு அனுப்புவோம் என அந்த வாலிபரை மிரட்டியுள்ளனர். சம்பந்தப்பட்ட வாலிபர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் லாலு தனது காதலியை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவருக்கு உதவிய மூன்று வாலிபர்கள், இரண்டு இளம் பெண்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.