அரியானாவைச் சேர்ந்த நிக்கி யாதவ் (25) என்ற இளம் பெண், டெல்லியைச் சேர்ந்த சாஹில் கெல்லாட் என்பவருடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவலின் போது நொய்டா  நகரில் கோவிலில் வைத்து இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும் இந்த திருமணம் பற்றி அறிந்த சாஹிலின் குடும்பத்தினர் அதிருப்தியில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய அவர் முடிவு எடுத்துள்ளார்.

இதனை அறிந்த அந்த இளம் பெண் அவரிடம் சென்று எதிர்ப்பு தெரிவித்ததுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சாஹில் கடந்த பத்தாம் தேதி போன் சார்ஜ்ருக்கான வயரைக் கொண்டு அந்த பெண்ணின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். மேலும் அவரது உடலை காரில் கொண்டு சென்று உணவு விடுதியில் உள்ள ஃப்ரிட்ஜில் மறைத்து வைத்துள்ளார். இந்த வழக்கில் சாஹில் மற்றும் நிக்கி இடையேயான திருமண சான்றிதழ்களை போலீசார்   கைப்பற்றியுள்ளனர்.

மேலும் நிக்கியின்   உடலை பிரிட்ஜுக்குள் மறைத்து வைக்க சாஹிலின் நண்பர் மற்றும் உறவினர்கள் உதவியுள்ளனர். இந்நிலையில் சாஹில்லுக்கு உதவிய குற்றத்திற்காக அவரது தந்தை வீரேந்தர் சிங், ஆஷிஷ் மற்றும் நவீன் என்னும் இரண்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அமர் மற்றும் லோகேஷ் என மொத்தம் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீர விசாரித்து கொலை திட்டத்தில் அவர்களுடைய பங்கு குறித்து ஆய்வு செய்து உறுதி செய்த பின்  அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.