மராட்டிய மும்பை சப் அர்பன் மாவட்டம் செம்பூரில் வசித்து வரும் 24 வயது இளைஞர் புறநகர் ரயிலில் கடலைமிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவருக்கு 3 லட்ச ரூபாய் கடன் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த இளைஞர் கடும் மன உளைச்சலில் இருந்து உள்ளார். இதற்கிடையில் அந்த இளைஞர் தான் தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் அந்த இளைஞரை கண்டுபிடித்து விசாரித்தனர். மேலும் இளைஞரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல்துறையினர் அவர் தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபடுமாறு கவுன்சிலிங் வழங்கினர். கவுன்சிலிங்கிற்கு பிறகு இளைஞர் சகஜநிலைக்கு திரும்பியதால் அவரை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.