சீனாவின் செங்க்டூ நகரத்தில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு எதிர்பாராத அதிர்ச்சி நேர்ந்தது.
சுமார் ரூ.1 லட்சத்திற்கு மேல் மாத வாடகை செலுத்தப்படும் உயர்தர அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி காலை மனைவி தனியறையில் உடை இல்லாமல் உறங்கிக் கொண்டிருந்தபோது, கண்ணாடி ஜன்னல் சுத்தம் செய்ய வந்த இரண்டு ஊழியர்கள் அவரை நிர்வாணமாக பார்த்துவிட்டனர். உடனே அதனை கண்ட மனைவி கத்தி கூச்சலிட, அடுத்த அறையில் இருந்த கணவர் ஓடி வந்தார். வீட்டின் ஜன்னல் துணி திரை திறந்த நிலையில் இருந்ததோடு, அறை முழுவதும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததால் சம்பவம் அவரை பெரிதும் பாதித்தது.
இந்த நிகழ்வுக்கு காரணமாக அந்த குடியிருப்பு நிர்வாகமே என்றும், ஜன்னல் சுத்தம் செய்யப்படவுள்ள துல்லியமான நாளை அவர்களுக்கு தெரிவிக்காமைதான் முக்கியக் காரணம் என்றும் தம்பதி கூறியுள்ளனர். நிர்வாகம் முன்கூட்டியே “ஏப்ரல் 21 முதல் 30-ம் தேதி வரை எப்போது வேண்டுமானாலும் சுத்தம் செய்யலாம்” என பொதுவான அறிவிப்பை வழங்கியிருந்ததோடு, சரியான தேதியை வழங்க மறுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், பலமுறை கேட்டும் எந்த ஊழியர் எந்த நாளில் சுத்தம் செய்வது என தெளிவான தகவல் வழங்கப்படவில்லை என்றும் கணவர் தெரிவித்தார்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தால் மனைவி பெரும் மன அழுத்தத்தில் சிக்கி விட்டதாகவும், அவர் தற்போது சிகிச்சை தேவையான நிலைக்கு சென்றுவிட்டதாகவும் தம்பதி தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நிர்வாகம் ஏதேனும் ஒரு பொது மன்னிப்பு கூறவேண்டும் என்றும், வாடகையில் பெரிய சலுகை வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் நிர்வாகம் வெறும் 80 டாலர் மட்டுமே கழிக்க முடியும் என கூறி இருக்கின்றது. “நாங்கள் மாதம் 10 ஆயிரம் யுவான் செலுத்துகிறோம், இது நியாயமா?” என வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது சீன சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, பெரும் கண்டனங்களும் கிளம்பி வருகின்றன.
