
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே சில உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க வேண்டுமென மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இந்த நிலையில் டெங்கு பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெங்குவை உருவாக்கும் ஏடிஎஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் வளரும்.
எனவே வீட்டின் அருகே தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டியை மூடி வைக்க வேண்டும்.
வீடு முழுவதும் கொசுவலைகளை பொருத்த வேண்டும். உடலில் அனைத்து பாகங்களையும் மூடும் வகையில் ஆடைகளை அணிய வேண்டும்.
டெங்கு கொசுக்கள் பூந்தொட்டிகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள், டயர்களில் முட்டையிடும். எனவே வீட்டில் இருக்கும் தொட்டிகள் மற்றும் பயன்படுத்தப்படாத டயர்கள் ஆகியவற்றில் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.