
உலக அளவில் பல கோடிக்கணக்கான மக்கள் facebook, whatsapp மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இது மெட்டா நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இந்நிலையில் மெட்டா நிறுவனம் கடந்த வருடம் ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் இந்த வருடமும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியானது. இந்நிலையில் தற்போது அமெரிக்க கிளை நிறுவனத்தில் பணிபுரியும் 24 ஊழியர்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.
அதாவது அந்த ஊழியர்கள் உணவு கூப்பன்களை பயன்படுத்தி 2,100 ரூபாய்க்கு டிடர்ஜென்ட் பவுடர் மற்றும் டூத் பேஸ்ட் போன்றவைகளை வாங்கியுள்ளனர். அதோடு சில ஊழியர்கள் அலுவலகத்தில் வழங்கப்படும் உணவுகளை பார்சல் கட்டி வீட்டிற்கு எடுத்துச் சென்றதையும் மெட்டா கண்டுபிடித்துள்ளது. அவர்கள் 24 பேரும் 4 லட்சம் டாலர்களை மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் இதன் காரணமாகத்தான் அவர்கள் 4 பேரையும் பேஸ்புக் நிறுவனம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.