
உத்திரபிரதேச மாநிலத்தில் ஐபிஎல் போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த வாலிபர் தவறுதலாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மீரட் மாவட்டத்தில் உள்ள கஜூரி கிராமத்தில் 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் பக்கத்து வீட்டுக்கு தன் தாத்தாவின் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சென்றான். அங்கு முகமது கைஃப் என்ற 18 வயது வாலிபர் டிவியில் ஐபிஎல் போட்டி பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அந்த வாலிபரின் பெற்றோர் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர்.
அந்த வாலிபரை பார்த்து சிறுவன் துப்பாக்கியை நோக்கி நீட்டிய நிலையில் அதிலிருந்த குண்டு பாய்ந்து வாலிபர் பலியானார். சிறுவன் விளையாட்டுக்காக சுட்ட நிலையில் அது விபரீதமாக முடிந்தது. அதாவது சிறுவனின் விரல் தவறுதலாக பட்டு தான் துப்பாக்கி சுடப்பட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கியின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த போது வாலிபர் உயிரிழந்த நிலையிலும் சிறுவன் மயங்கி நிலையிலும் கிடந்துள்ளார்கள். மேலும் இது குறித்த தகவலின் படி காவல்துறையினர் சிறுவனை காவலுக்கு எடுத்துள்ள நிலையில் வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.