
தார்வாட் மாவட்டம் கல்காட்கி தாலுகாவில் உள்ள பம்மிகட்டி கிராஸ் அருகே, டிராக்டர் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென வன்முறையாக மாறியதில், இரண்டு பேர் காயமடைந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்தது.
காவல் ஆய்வாளர் ஸ்ரீஷைல் கௌஜலகிஅளித்த தகவலின் படி, ஒரு டிராக்டர் மற்றும் ஒரு லாரி அருகருகே பயணித்த நிலையில், வாகனங்கள் உரசியதால் மோதல் ஏற்பட்டது. இதனால் ஓட்டுனர்களுக்கு இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டது.
View this post on Instagram
பின்னர், லாரி ஓட்டுநர், டிராக்டரை நிறுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட பதற்றத்தில் ஓட்டுனரின் கவனக்குறைவால் டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து 2 பேர் மீது மோதியது. காயமடைந்த இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தற்போது, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கல்காட்கி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.