
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் கிரைம் தாக்குதல்கள் என்பது அதிகரித்து விட்டது.
இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் புதுவகை மோசடியை இணைய குற்றவாளிகள் அரங்கேற்றி வருவதாக Cloud SEC சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், டிராபிக் இ-சலான் APK என்ற பெயரில் வரும் லிங்கை கிளிக் செய்தால் நமது செல்போனை மோசடியாளர்கள் முழுமையாக கட்டுப்படுத்த கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4400 செல்போன்களை மோசடியாளர்கள் ஹேக் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இது போன்ற லிங்கை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.